Header Ads

Header ADS

சிரிப்பு நடிகர் வடிவேலுவுக்கு வந்த சோதனை



காமெடி நடிகராக வடிவேலு நடிக்க ஆரம்பித்ததிலிருந்து தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு சிரிப்பு மழையை வாரி வழங்கியவர் வடிவேலு. 

காமெடி நடிகராக புகழின் உச்சத்திற்கு முன்னனி நடிகராக உயர்ந்து வந்த நிலையில், அவர் 2011ல் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதிலிருந்து அவருக்கு பிரச்னைக்கு மேல் பிரச்னை வந்தது. 

2011 சட்டமன்ற தேர்தலில் திமுக.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக கூட்டணி வைத்திருந்த விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். 

அந்த தேர்தலில் திமுக தோல்வி அடையவே, வடிவேலுவின் திரைவாழ்க்கை அஸ்தமனம் ஆக தொடங்கியது.

இந்நிலையில் மீண்டும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் 2006ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் தயாரிக்கப்பட்டு வந்தது. 

ஆனால் சம்பள பிரச்னை காரணமாக அதில் நடிப்பதில் வடிவேலு பிரச்னை செய்ததாகவும், படத்திற்காக கோடி கணக்கில் செலவு செய்து போடப்பட்ட செட்டுகள் வீணானதாக தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். 

வடிவேலுவுக்கு தடை :இந்நிலையில் வடிவேலு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் சரியான விளக்கம் இதுவரை தராததால், அவர் இனி நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.